சீனு ராமசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (20:36 IST)
‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி.

 
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். வாடிப்பட்டியைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்துக்குப் பிறகு சமுத்திரக்கனியை இயக்குகிறார் சீனு ராமசாமி. சமுத்திரக்கனியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, ‘விரைவில் அடுத்த பரபரப்பு… வெல்வோம்’ எனத் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்