ஊ அண்டாவா மாவா.... வைரலாகும் சமந்தாவின் டான்ஸ் Rehearsal வீடியோ!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (16:57 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 2017ல் பிரமாண்டமாக திருமணம் செய்துக்கொண்ட இவர்கள் 4 வருடத்திலே விவாகரத்து செய்து  பிரிந்துவிட்டனர். அதன் பிறகு கேரியரில் அதிக கவனத்தை செலுத்தி வரும் சமந்தா நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். 
 
அண்மையில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் அவர் ஆடிய ஐட்டம் பாடலால் தான் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் அந்த பாடலுக்கு சமந்தா நடன பயிற்சி எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அந்த வீடியோ இதோ!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்