திரைக்கதை மன்னன் பாக்யராஜுக்கு ஹேப்பி பர்த்டே...!

வெள்ளி, 7 ஜனவரி 2022 (11:26 IST)
தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர் , இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞராக சிறந்து விளங்கி வருகிறார். 
 
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் 6 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர். பின்னர்  புதிய வார்ப்புகள் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 
 
தமிழ் சினிமாவில் 80ஸ் காலத்தில் மிகசிறந்த இயக்குனராக தமிழ் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். இந்நிலையில் இன்று தனது 68வது பிறந்தநாள் கொண்டாடும் பாக்யராஜுக்கு  திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்