தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் ரக்த் பிரம்மாண்ட் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.இது தவிர அவர் கைவசம் படங்கள் எதுவும் இப்போது இல்லை. சமீபகாலமாக அவர் நடித்த குஷி மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன.
இந்நிலையில் சமந்தா சிட்டாடல் தொடரின் இயக்குனர்களில் ஒருவரான ராஜ்- உடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் பல பொது இடங்களுக்கு ஒன்றாக சென்றுவருகின்றனர். சமீபத்தில் உலக பிக்கில் பால் சாம்பியன்ஷிப் போட்டியைக் காண இருவரும் ஒன்றாக சென்றிருந்தனர். அப்போது அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன.
இந்நிலையில் இந்த புகைப்படங்களை விமர்சித்து வரும் ரசிகர்கள் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்காதீர்கள் சமந்தா, ராஜ் ஏற்கனவே திருமணமாகி குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர். உங்களை மணக்கோலத்தில் பார்க்கதான் ஆசைப்படுகிறோம். ஆனால் இன்னொருவரின் கணவரோடு அல்ல” என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில் ராஜ் தன்னுடைய மனைவியை விரைவில் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.