கள்ள காதல்... கருக்கலைப்பு இன்னும் ஏதா இருக்கா? கொந்தளித்த சமந்தா!

சனி, 9 அக்டோபர் 2021 (18:55 IST)
சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா தனது நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
 
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனும் நடிகருமான நாகசைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
 
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சமந்தா கணவரை அவர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தார். நாகசைதன்யாவுக்கு அதிரடி சண்டை காட்சிகளில் நடிக்கவோ நன்றாக நடனம் ஆடவோ தெரியாதோ. அதனால் அவர் சமந்தாவின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்ள ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சமந்தா மீது ஈகோ பிரச்சனை வரவே அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். 
 
ஆரம்பத்தில் சமந்தா எவ்வளவோ இறங்கி பேசியும் எடுத்துக்கொள்ளாத நாகசைதன்யா நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன் என சினிமாவை முற்றிலும் விட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் சாதாரண மனைவி போல் குழந்தை குடும்பம் என இருக்கவும் ஓகே சொன்னாராம் சமந்தா. ஆனாலும்,  நாகசைதன்யாவுக்கு ஈகோ பிரச்சனை போகல.. என விவகாரத்து செய்ய மும்முரமாக இருந்து அதற்கான வேளைகளில் இறங்கிவிட்டாராம்.  
 
பின்னர் விவாகரத்தும் அறிவித்தனர். ஆனால், சமந்தா வேறு ஒருவருடன் தவறான உறவில் இருந்தார். குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை இதெல்லாம் தான் விவாகரத்துக்கு காரணம் என செய்திகள் வெளியானது. இதெல்லாம் கேட்டு பொங்கி எழுந்துள்ள சமந்தா, " விவாகரத்துக்கு பின் என்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள். விவாகரத்தே ஒரு பெரிய வலி. ஆனால், என் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆனாலும், இவையெல்லாம் என்னை பாதிக்காது என கூறியுள்ள சமந்தா கள்ளக்காதல், கர்ப்பம் என என் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள். 
 
சினிமா நடிகர்களும் சாதாரணமானவர்கள்தான். ஆனால், அவர்கள் குடும்பத்தில் பிரச்சனை என்றால் அது செய்தியாக மாறிவிடுகிறது. சாதாரண மனிதர்களோ, திரை பிரபலங்களோ ஒருவரை ஒருவர் புரிந்து, அட்ஜெஸ்ட் செய்து, சில விஷயங்களை தியாகம் செய்து வாழ்ந்தால் மட்டுமே இல்லற வாழ்க்கை இனிக்கும் என்பது சைத்தன்யாவுக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் பொருந்தும் என கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்