சமந்தாவை குறிவைத்து போடப்பட்டிருப்பதாக இருந்த ஒரு பதிவு குறித்து சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.
எனது ஆசிரியர் எனக்கு சொல்லிக்கொடுத்த முதல் பாடம் என்னவெனில் 'ஏமாற்றுவார்கள் எப்போதும் வெற்றி பெற மாட்டார்கள்' என்று சித்தார்த் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமந்தாவை குறிவைத்து போடப்பட்டிருப்பதாக பலரும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதற்கு சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, யாரையும் மனதில் வைத்து அந்த ட்வீட்டை போடவில்லை. பல வருடங்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவர் சொல்லித் தந்ததை வைத்து அதனைப் போட்டேன்.
என்னுடைய மகா சமுத்திரம் படம்கூட அப்படியான ஒரு விஷயத்தைத்தான் கையாண்டிருக்கிறது. யாருடைய பெயரையும் தேவையில்லாமல் இழுக்காதீர்கள். என்னுடைய ட்வீட் தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை. சமூகவலைத்தளத்தில் வரும் யூகங்களுக்கு நான் பொறுப்பல்ல என தெரிவித்துள்ளார்.