தமிழ் பேச வரும் சமந்தாவின் ‘ஓ பேபி’ – சுதந்திர தின ரிலீஸ்!

Webdunia
புதன், 7 ஆகஸ்ட் 2019 (14:35 IST)
தெலுங்கில் சமந்தா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ஓ பேபி படத்தின் தமிழ் டப்பிங் சுதந்திர தினத்தன்று வெளியாக இருக்கிறது.

சமந்தா நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியான படம் ஓ பேபி. வயதான பாட்டி ஒருவர் திடீரென 24 வயது பெண்ணாக மாறினால் என்ன நடக்கும் எனபதை நகைச்சுவைக் கலந்து சொன்னதால் இந்தப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இப்போது இந்தப் படம் அதேப் பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே அந்த தினத்தில் ஜெயம் ரவியின் கோமாளி, சசிகுமாரின் கென்னடி கிளப், காஜல் அகர்வாலின் ரணரங்கம் உள்ளிட்ட படங்கள் ரிலிஸாக உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்