அதிரடி ஆக்சனில் இறங்கிய சமந்தா..என்ன செய்தார் தெயரியுமா?

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (21:53 IST)
நடிகை சமந்தா தற்காப்பு கலை கற்று வருகிறார். இது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில், வெளியாகி ஹிட் ஆன படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தின் விஜய்சேதுபதில் – நயன் தாராவுடன் இணைந்து நடித்திருந்தார்.

இப்படத்தை அடுத்து, சாகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் சமந்தா நடித்துள்ளார். இப்படங்கள் இரண்டும் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

ஏற்கனவே      ஃபேமிலிமேன் என்ற வெப்சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த சமந்தா, தற்போது, இந்தியில் மீண்டும் ஒரு வெப்சீரிஸில்  நடிக்கிறார். இதில், ராஜ் கே இயக்குகிறார், இளம் நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இதில், அதிரடி காட்சிகள் உள்ளதால், இதற்காக தற்காப்பு கலைகளை சமந்தா கற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்