தளபதி 66 பட தயாரிப்பாளர் வெளியிட்ட சமந்தா போஸ்டர்… இணையத்தில் வைரல்!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:28 IST)
நடிகை சமந்தா இப்போது சகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்தது மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆடியது என சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார். ஆனால் அடுத்தடுத்து தனது படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்நிலையில் இன்று அவர் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸாகி அவரின் பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. மேலும் அவர் நடிக்கும் சகுந்தலம் படத்தில் இருந்து அழகான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சகுந்தலம் படத்தை விஜய் 66 படத்தை தயாரிக்கும் தில் ராஜுதான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்