சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் ரிலீஸ் எப்போது? புதிய தகவல்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (13:15 IST)
சமந்தா நடித்து வரும் யசோதா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
பிரபல நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் யசோதா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமந்தா இந்த படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாள்களில் டப்பிங் பணியை அவர் முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் மற்ற நடிகர்களின் படங்கள் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்ட நிலையில்  பணிகள் முடிவடையாததால் தற்போது செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இந்த படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்