தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது அவர் கைவசம் சிட்டாடல் தொடர் மட்டுமே உள்ளது. இந்நிலையில் அந்த தொடரின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட சமந்தா, ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிக்கும் போது மயக்கமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.