சமந்தா இவர்களிடம் தான் அதிக நெருக்கம் காட்டுகிறார்: வருங்கால கணவர் புகார்!!

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (13:20 IST)
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.


 
 
இந்நிலையில், தனது வருங்கால மனைவி சமந்தா தன்னை விட தனது பெற்றோரிடம் நெருக்கமாக உள்ளதாக நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
 
சமந்தா என்னைவிட என் அம்மாவிடம் மிகவும் நெருக்கமாக உள்ளார். இருவரும் தினமும் ஒரு மணிநேரமாவது போனில் பேசிக் கொள்கிறார்கள். என்னை பற்றிய புகார் நேரடியாக என் அம்மாவிடம் தான் செல்கிறது.
 
சமந்தா என் அப்பா நாகர்ஜுனாவிடமும் நன்றாக பழகுவார். இருவரும் சேர்ந்தால் பெரும்பாலும் படம் பற்றி பேசுவார்கள் என்று நாக சைதன்யா கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்