8 வருடங்களுக்கு பின் சமந்தாவை சந்திக்கின்றேன்: நடிகர் சதீஷ் டுவிட்

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:21 IST)
8 வருடங்களுக்கு பின்னர் நடிகை சமந்தாவை சந்திக்கின்றேன் என காமெடி நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார் 
 
விஜய் நடித்த கத்தி திரைப்படத்தின் போது சமந்தாவை சந்தித்ததாகவும் அந்த அந்த படத்தின் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சந்தோஷமான நிகழ்வுகளை மிஸ் செய்கிறேன் என்று நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்
 
மேலும் சமந்தாவுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த சமந்தாவின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடித்த சதீஷ் அடுத்ததாக சட்டம் என் கையில் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்