தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில் இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார் முருகதாஸ். மார்ச் 30 ஆம் தேதி படம் ரிலீஸாகவுள்ள நிலையில் சமீபத்தில் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இந்த படத்தில் சத்யராஜ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். படம் பற்றி பேசியுள்ள அவர் “நான் சினிமாவில் அறிமுகமான போது வில்லன் கதாபாத்திரங்களில்தான் நடித்தேன். நிறைய நக்கல் புடிச்ச வில்லன் வேடங்களில் நடித்துக் கலக்கினேன். அப்போது அது ட்ரண்ட்டாக இருந்தது. அப்புறம் ஹீரோவாகி 100 படங்களுக்கு மேல் நடித்தேன். ஆனால் இந்த சிக்கந்தர் படம் மூலமாக எனக்குள் இருந்த அந்த நக்கல் வில்லனை முருகதாஸ் மீண்டும் வெளிக்கொண்டுவந்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.