கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட் நடிகர் சல்மான் கானின் திரைவாழ்க்கை பிரகாசமாக இல்லை. அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன. இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸானது. ஆனால் ரிலீஸாவதற்கு முன்பே இந்த படத்தின் HD பிரிண்ட் முதல் நாளே இணையத்தில் ரிலீஸானது. இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்துள்ளார். படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. இதன் மூலம் மிக மோசமான தோல்விப் படமாக அமைந்துள்ளது. படம் தோல்வி அடைந்தது கூட பரவாயில்லை, ஆனால் முருகதாஸின் படம் போலவே சிக்கந்தர் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த படத்தின் ரிலீஸுக்குப் பின்னர் பேசிய முருகதாஸ் “சிக்கந்தர் படத்தின் கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ஆனால் நான் நினைத்த கதையை திரையில் கொண்டு வர முடியவில்லை. அதற்கு படக்குழுவும் ஒரு காரணம். ஆதிக்கம் செலுத்தும் வகையில் ஒரு யூனிட் என்னிடம் இருந்திருந்தால் அதை சாத்தியப்படுத்தியிருக்கலாம். அது என்னுடைய தவறு அல்ல” என்று கூறி சல்மான் கான் ஷூட்டிங்குக்கு லேட்டாகதான் வருவார் என்றும் மறைமுகமாக சல்மான் கானை தோல்விக்குக் காரணமாக சொல்லியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுபற்றி பேசியுள்ள சல்மான் கான் “சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங்கில் நான் 9 மணிக்குதான் கலந்துகொண்டேன். அவர் அடுத்து மதராஸி என்று படம் எடுத்தார். அந்த படத்தின் ஹீரோ காலை 6 மணிக்கெல்லாம் வந்துவிடுவார். அதனால் அந்த படம் ஹிட்” என நக்கலாக மதராஸி படத்தின் தோல்வியை சுட்டிக் காட்டியுள்ளார்.