சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (14:54 IST)
அமரன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள ‘மதராஸி’ படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ரிலீஸானது. கடந்த காலங்களில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ படம் அமைந்துள்ளது.

இந்த படத்தில் வித்யுத் ஜமால், பிஜு மேனன், ருக்மினி வசந்த் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் மதராஸி தோல்வி படமாகவும் இல்லாமல் வெற்றிப் படமாகவும் இல்லாமல் தப்பித்தது.

படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்