சலார் படத்தின் பிரம்மாண்ட சண்டைக் காட்சிக்காக 750 வாகனங்கள்!

சனி, 4 நவம்பர் 2023 (11:26 IST)
பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல கவனம் பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்றுக்காக சுமார் 750 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் சிலாகிக்கப்பட்டு பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்