என்னது சலார் படத்தின் மூன்றாம் பாகமும் இருக்கா?… பிரசாந்த் நீலின் மனைவி அளித்த பதில்!

vinoth

வியாழன், 25 ஜனவரி 2024 (06:56 IST)
பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரித்துள்ளார். கே ஜி எஃப் இசையமைபபாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களை திருப்திப் படுத்தாததால் இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இந்தியா முழுவதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் ரசிகர்களை பெரியளவில் ஏமாற்றியுள்ளதாக சொல்லப்பட்டது.

அடுத்த ஆண்டு சலார் 2 திரைப்படம் ரிலீஸாகும் என தெரிகிறது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீலின் மனைவி லத்திகாவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் சலார் படத்தின் மூன்றாம் பாகம் வருமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு லத்திகா “அதை இரண்டாம் பாகத்தின் முடிவில் தெரிந்து கொள்வீர்கள்” எனக் கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் முதல் பாகத்தையே தாங்க முடியவில்லை. இதில் மூன்றாவது பாகம் வேறா என கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்