நாளை ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிரபாஸின் சலார்!

vinoth

வெள்ளி, 19 ஜனவரி 2024 (12:26 IST)
பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரித்துள்ளார். கே ஜி எஃப் இசையமைபபாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களை திருப்திப் படுத்தாததால் இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இந்தியா முழுவதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் ரசிகர்களை பெரியளவில் ஏமாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் வசூலில் பின்தங்கியது. இந்நிலையில் நாளை இந்த படம் நாளை நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்