எனக்கு அடிக்கடி திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள்… விஜய் தேவரகொண்டா பதில்!

vinoth

சனி, 20 ஜனவரி 2024 (09:30 IST)
தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. ஆனால் இருவருமே அதை மறுத்து தாங்கள் நண்பர்கள்தான் என்றும் கூறி வந்தாலும், அதை ரசிகர்கள் நம்பவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. அதில் இரண்டு கைகள் ஒன்றின் மேல் ஒன்று இருக்க “நிறைய நடக்கின்றன. ஆனால் இது ஸ்பெஷலானது. சீக்கிரம் அறிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக தகவல்கள் பரவின. இதுபற்றி விளக்கமளித்துள்ள விஜய் தேவரகொண்டா “ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறையும் எனக்கு திருமணம் செய்து வைக்க மீடியாக் காரர்கள் ஆசைப்படுகிறார்கள். எனக்கு இப்போதைக்கு நிச்சயதார்த்தமோ, திருமணமோ இல்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்