பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் swiss ball கொண்டு ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சிலர் பேசாம இந்த நடிக்குற வேலைய எல்லாம் ஓரங்கட்டிவிட்டு ஒரு ஜிம் ஆரம்பிச்சுடுங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.