முதல் படத்திலேயே அம்மா கேரக்டரில் நடிக்கும் சாய் பல்லவி!!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (16:13 IST)
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து பிரபலாகும் நடிகைகளுக்கு மத்தியில் மலையாளத்தில் நடித்து தமிழில் பிரபலமானவர் சாய் பல்லவி.


 
 
மலையாளத்தில் சில வெற்றி படங்களை கொடுத்து, பின்னர் தெலுங்கில் ஒரு வெற்றி படத்தை கொடுத்துவிட்டு தற்போது தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
 
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் ஆகிய படங்கள் கைகூடாமல் போக, தற்போது விஜய் இயக்கும் ‘கரு’ படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைக்கிறார்.
 
இந்த படத்தை பற்றி இயக்குனர் விஜய் கூறியதாவது, ஒரு தாய்க்கும் அவரது நான்கு வயது மகளுக்குமான பிணைப்பு பற்றிய கதையில் சாய் பல்லவி தாயாக நடிக்கிறார். இந்த படத்தில் கருக்கலைப்பு தொடர்பாக பேசியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்