காயத்ரி ரகுராம் பதிவிட்ட கருத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (15:53 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 போட்டியாளர்களில் நடன இயக்குநர் காயத்ரி ரகுராமும் ஒருவர். பிக்பாஸ் வீட்டில்  இருந்து வெளியே வந்தாலும் ரசிகர்களின் அர்ச்சனை டுவிட்டரில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதற்கேற்றவாறு  ஏதாவது ட்வீட் செய்து மாட்டிக்கொண்டே இருக்கின்றார்.

 
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை காயத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். ரசிகர்கள் அவர் மீதுள்ள கோபத்தில், அவர் போடும் ஒவ்வொரு டிவீட்டையும் நெட்டிசன்கள் கலாய்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.



 
இந்நிலையில் காயத்ரி ரகுராம் இன்று காலை வணக்கத்தோடு கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் பலவாறு கிண்டல் செய்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர், நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சுட்டு பக்கத்துலே உக்காந்துக உனக்கு பின்னாடி வர சந்ததிகள் படிச்சி பாத்து தெளிவாயிடுவாங்க என கலாய்த்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்