சந்திரமுகி 2 படத்தில் இணையும் கும்கி நடிகை? – எத்தனை ஹீரோயின்கள்?

ஞாயிறு, 10 ஜூலை 2022 (13:06 IST)
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரண்ஸ் நடிக்கவுள்ள சந்திரமுகி 2 படத்தில் கும்கி பட நடிகை இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் சந்திரமுகி. அதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எடுக்க பி.வாசு முயன்று வரும் நிலையில் அதில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. ரஜினிக்கு பதிலாக இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் நாயகியாக யாரை நடிக்க வைப்பது என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது சாய் பல்லவி உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது கும்கி படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமி மேனனிடமும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்