பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி உலகெங்கும் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது. இந்த படத்தின் வெற்றியை பாலிவுட் மட்டுமின்றி வட இந்திய மாநில பிரபலங்கள் அனைவரும் அசந்து போயுள்ளனர்.
இந்த நிலையில் 'பாகுபலி 2' வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், 'பாகுபலி 2' படத்தின் மொத்த வசூல் தொகையில் எத்தனை சைபர் இருக்கின்றது என்பதையே என்னால் எண்ண முடியவில்லை' என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் சச்சின் நடித்த 'சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. தமிழ், உள்பட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படம் பாகுபலி 2' வசூலை நெருங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்