தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் தயாரித்து நடித்த, விக்ரம் படத்தை லோகேஷ் இயக்கியிருந்தார்.
 
									
				என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களைவிட வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள், ஆனால், அதையும் தாண்டி, என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும், இருப்பது  நான் ஆசைப்பட்டதை விடட அதிகம்.
	உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உள்பட யார் சொன்னாலும் நம்ம  வேண்டாம்.
	யூட்யூபைத் திறந்தால் வார்த்தைகளின் களங்கியமே தென்படும், அதிலுள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வர்த்தை மலர்களை எடுத்துக் கொள்ளலாம்.
	இவையெல்லாம் தொடர வாழ்த்துகள்.
	அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள், உங்கள் அன்ன பாத்திரம் என்றும்  நிறைந்திருக்கும்   என்று எழுதியிருக்கிறார்.