தமிழ், மலையாளத்தில் மட்டுமே வெற்றி: மற்ற மொழிகளில் எடுபடாத விக்ரம்!

ஞாயிறு, 5 ஜூன் 2022 (17:00 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இந்த படம் முதல் நாளில் 20 கோடியும் இரண்டாவது நாளில் 22 கோடியும் வசூல் ஆனதாக கூறப்படுகிறது.
 
அதேபோல் கேரளாவில் இந்த படம் முதல் நாளில் 5 கோடி ரூபாய் வசூல் ஆனதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் முதல் பாதியில் முக்கிய கேரக்டரில் பகத் பாசில் வருவதால் இந்த ஆச்சரியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
 
ஆனால் அதே நேரத்தில் தெலுங்கு கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றும் ஒரு சில லட்சங்களில் மட்டும்தான் வசூலாகி உள்ளதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் 2 ஆகிய படங்கள் போல் இந்த படம் ஒரு பான் இந்தியா வெற்றி படம் அல்ல என்று கூறப்பட்டு வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்