அமேசான் ஓடிடியில் செல்வராகவனின் அடுத்த படம்?

வெள்ளி, 12 நவம்பர் 2021 (14:38 IST)
செல்வராகவனின் அடுத்த திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக்காகிதம் என்ற திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அமேசானில் வெளியாகும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமேசான் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காகிதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது என்பதும் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் இன்னும் மூன்று மாதங்கள் கழித்துதான் அமேசானில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்