ஏற்கனவே கடந்த சில வாரங்களில் நயன்தாராவின் நெற்றிக்கண், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் ஆகிய திரைப்படங்களில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிய நிலையில் தற்போது பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் திரைப்படமும் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பிரபுதேவா ஜோடியாக, நிவேதா பெத்துராஜ், சுரேஷ் மேனன், மகேந்திரன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இமான் இசையில் வெங்கடேஷ் ஒளிப்பதிவில் சிவாநந்தீஸ்வரர் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது