மகன் விஜய் கட்சி குறித்து முதன்முறையாக மனம் திறந்த எஸ்.ஏ.சி.. என்ன சொன்னார் தெரியுமா?

Mahendran

புதன், 29 மே 2024 (14:18 IST)
தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவருடைய தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சி முதல் முறையாக மகனின் கட்சி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் தனது மனைவி ஷோபாவுடன் காஞ்சிபுரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் அப்போது செய்தியாளர்கள் அவரது மகன் விஜய் கட்சி குறித்து கேள்வி எழுப்பினர். 
 
மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்று சொன்ன நீங்கள் இப்போது அவர் கட்சி ஆரம்பித்து உள்ளதை குறித்டு என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு என்னுடைய ஆசீர்வாதம் எப்போதும் எனது மகனுக்கு உண்டு என்றும் அவரது கட்சி நன்றாக வளரும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் விஜய்யின் கட்சியில் உங்கள் ஈடுபாடு இருக்குமா என்று கேட்டபோது கண்டிப்பாக இருக்கும் என்று கூறியவர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருக்கிறேன், இந்த நேரத்தில் தயவு செய்து அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று அவர் கூறினார். இதனை அடுத்து அவர் தனது மனைவியுடன் சாமி கும்பிட்டு விட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன் தான் விஜய் தனது அப்பா அம்மாவை சந்தித்த புகைப்படத்தை எஸ்.ஏ.சி வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த புகைப்படம் வைரலானது என்பதும் தெரிந்தது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்