சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த மாணவிகள்.. அரசு பள்ளியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

புதன், 29 மே 2024 (14:02 IST)
பீகார் மாநிலத்தில் அரசு பள்ளியில் மாணவிகள் திடீரென சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுருண்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது என்பதும் இந்த வெயில் காரணமாக பொதுமக்கள் பெரும் துன்பத்தில் இருக்கின்றன என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் இன்று வெப்ப அலை காரணமாக ஷேக்புரா என்ற பகுதியில் அரசு பள்ளி மாணவிகள் சிலர் திடீரென சுருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனை அடுத்து ஆசிரியர்கள் மயங்கிய மாணவிகளின் முகத்தில் உடனடியாக தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்ததாகவும் அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த மாணவிகள் சிகிச்சை பெற்று தற்போது உடல் நலம் தேறி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
கோடை வெயிலில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ மாணவிகள் எதற்காக பள்ளிக்கு வந்திருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த பீகார் மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்