ரூ. 200 கோடி வசூலைத் தாண்டுமா ‘மெர்சல்’?

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (09:48 IST)
இதுவரை 150 கோடி ரூபாயை வசூலித்துள்ள ‘மெர்சல்’, 200 கோடியைத் தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 
விஜய் நடிப்பில் கடந்த புதன்கிழமை ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தில், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து இந்தப் படத்தை  தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
5 நாட்களாக ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய இந்தப் படத்திற்கு, வேலை நாட்களான திங்கள், செவ்வாயிலும் கூட்டம் இருப்பதாகவே  தியேட்டர் ஓனர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 150 கோடி ரூபாயை வசூலித்துள்ள இந்தப் படம், விரைவில் 200 கோடி  வசூலிக்கும் என நம்புகின்றனர். அப்படியானால், 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் விஜய் படம் இதுவாகத்தான் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்