’’விக்ரம்’’ படத்தின் டிரைலரை வெளிட்ட ஆர்.ஆர்.ஆர் பட நடிகர்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (18:58 IST)
கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள படம்  ’விக்ரம்’  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது .

இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து,  நரேன், பகத்பாசில், விஜய் சேதுபதி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.   

ஏற்கனவே இப்படத்தின்  முதல் சிங்கில் வெளியாகி பெரும் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பெரும் விமரிசையாக  நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் தெலுங்கு டிரைலரை ராம் சரண் இன்று சமூக வலைதளப்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்