பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது. இதற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் செய்து வந்தனர். ப்ரமோஷன் பணிகளுக்காகவே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு மாதத்துக்கு பிறகு நேற்றுபடம் ரிலிஸாகியுள்ளது.
படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் இந்த படம் கலக்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்துள்ள இயக்குனர் ஷங்கர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் காலம் காலத்துக்கு எதிரொலிக்கப் போகும் கர்ஜனை… இந்த மாதிரி ஈடினையில்லாத ஒரு அனுபவத்தைக் கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. ராம்சரணின் ரேஜிங்கான நடிப்பு , ஜுனியர் என் டி ஆரின் இதயத்தைக் கவரும் நடிப்பு. உங்கள் கற்பனை ஈடு செய்ய முடியாதது மஹாராஜமௌலி எனப் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.