கிரவுட் பண்டிங்... களத்தில் இறங்கினார் ரோகிணி

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2017 (15:37 IST)
நடிகை ரோகிணி, அப்பாவின் மீசை என்ற படத்தை இயக்கியுள்ளார். பல வருடங்களுக்கு முன் கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று தோன்றலாம். உண்மைதான். இந்தப் படம் தயாராகி பல வருடங்களாகிறது.


 

படப்பிடிப்பு முடிந்தாலும் அப்பாவின் மீசையின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் முடியவில்லை. காரணம், கரன்சி. பணம் இல்லாததால் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தடைபட்டுள்ளன. பதினாறு திசைகளிலும் யோசித்தவர், கடைசியாக கிரவுட் பண்டிங்கின் மூலம் பணம் திரட்டுவது என்று முடிவு செய்துள்ளார். ரோகிணியின் இலக்கு 40 லட்சங்கள்.

தயாரிப்பாளராக விரும்புகிறவர்களுக்கு இதுவொரு வாய்ப்பு. ரோகிணிக்கு உதவினால் தயாரிப்பாளராகவும் ஆகலாம், ரோகிணிக்கும் உதவலாம். என்ன ரெடியா...?
 
அடுத்த கட்டுரையில்