ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ‘ராக்கி’… எந்த நாட்டுல தெரியுமா?

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (09:52 IST)
வசந்த் ரவி நடித்த ராக்கி திரைப்படம் மலேசியாவில் உள்ள ஓடிடி ஒன்றில் வெளியாக உள்ளது.

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து முடித்துள்ள ராக்கி படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்த படத்தில் வசந்த்ரவியோடு பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான இந்த திரைப்படம் ரிலீஸில் சிக்கியது.

இந்நிலையில் நயன்தாரா தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் மூலமாக படத்தை ஒருவழியாக டிசம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட்டார். ஆனால் போதுமான வரவேற்பு இல்லை. சினிமா ரசிகர்களுக்கு மட்டும் படம் பிடித்தமானதாக இருந்தது. இந்நிலையில் படம் ஓடிடியில் எப்போது ரிலிஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

இதையடுத்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அதுபற்றிய ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் மலேசியாவில் உள்ள அஸ்ட்ரோ என்ற ஓடிடி தளத்தில் படத்தின் சென்சார் செய்யப்பட்ட வெர்ஷன் வெளியாவதை உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்