பெண்களுக்கு கட்டுபாடுகள் அவசியமில்லை: டாப்சி!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (10:43 IST)
நடிகை டாப்சி பேட்டி ஒன்றில் கூறும்போது நான் விருப்பப்பட்டு சினிமாவுக்கு வரவில்லை. மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் அதில் ஈடுபட்டேன். அதன்மூலம் சினிமா வாய்ப்பு வந்து, ஒருகட்டத்தில் சினிமா பிடித்துபோய், அதில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்தேன்.

 
நான் தன்னம்பிகையோடு, பயப்படாமல் மாடலிங் செய்தபோது எனது தந்தை பயந்தார். மற்றவர்கள் தவறாக பேசுவார்களோ என்று பயந்தார். எனது படங்கள் விளம்பரங்களில் வெளியாகி நண்பர்கள் அவரை பாராட்டிய பின்பு நிம்மதியாக இருந்தார்.
 
பெற்றோர்கள் சுற்றி இருப்பவர்களுக்கு பயந்துதான் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் வளர்க்கிறார்கள். நானும் அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்தே வந்துள்ளேன். பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது வரை வெளியுலகம் பற்றி எதுவும் தெரியவில்லை. தற்போது வெளியாட்களுடன் பழகிய பிறகுதான் உலகத்தை பற்றி தெரிந்து கொண்டேன். இப்போது எனது பெற்றோர் நான் சொல்வதை கேட்பதோடு, பெண்களுக்கு கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்பதையும் உணர்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்