பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் மூன்று படங்கள்

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (13:46 IST)
பிப்ரவரி 9ஆம் தேதி, மூன்று பெரிய படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.
காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இதுவரை 3 படங்கள் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன. ‘பிரேமம்’  மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த சாய் பல்லவி, தமிழில் அறிமுகமாகும் படம் ‘கரு’.  லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், அபார்ஷனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
 
பாலா இயக்கத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படமும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலாவே தயாரித்துள்ள இந்தப் படத்தில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் இருவரும் முக்கிய கேரக்டர்களில்  நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸரில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம், பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியது.
 
ஜீவா, நிக்கி கல்ரானி நடித்துள்ள ‘கீ’ படமும் அதே தேதியில் ரிலீஸாக இருக்கிறது. கலீஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்