இதுதானே ‘கரு’ படத்தின் கதை?

வெள்ளி, 9 ஜூன் 2017 (13:25 IST)
நேற்று வெளியான ‘கரு’ படத்தின் போஸ்டரை வைத்தே, படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள்  ஊகித்துள்ளனர்.

 
விஜய் இயக்கத்தில் ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நடிக்கும் படம் ‘கரு’. இதுதான் தமிழில் சாய் பல்லவி நடிக்கும் முதல் படம். இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நேற்று வெளியானது. அதைப் பார்த்த ரசிகர்கள், இப்படித்தான் கதை இருக்கும் என்று ஊகித்துள்ளனர்.
 
ஃபர்ஸ்ட் லுக்கில், தாயும், மகளும் கட்டியணைத்து படுத்திருப்பது போலவும், அவர்களைச் சுற்றி பறவையின் கூடு போலவும் உள்ளது. அப்படியானால், தலைப்பை வைத்துப் பார்க்கும்போது, இது தாய் – மகள் உறவு சம்பந்தப்பட்ட கதை என்று புரிகிறது.
 
ஆனால், அது சாய் பல்லவியின் சொந்த மகளாக (படத்தில்தான்) இருப்பதற்கு வாய்ப்பில்லை. காரணம், சாய் பல்லவி நடிப்பில் இரண்டு படங்கள்தான் வெளிவந்திருக்கின்றன. அதுவும் மலையாளப் படங்கள். தெலுங்கிலும் இப்போதுதான் ஒரு படத்தில்  நடித்திருக்கிறார், இன்னொரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். தமிழிலும் இதுதான் முதல் படம். எனவே, அதற்குள் அம்மாவாக  நடிக்க ஒத்துக்கொள்ள மாட்டார்.
 
ஒருவேளை ‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா ராஜேஷ் போல் துணிச்சலாக உண்மையிலேயே அம்மாவாக நடித்தாலும் நடிக்கலாம். இல்லையென்றால், அந்தக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் வளர்ப்புத் தாயாகவோ அல்லது தாயை இழந்த  தன் தங்கையைத் தாய் போல காக்கும் அக்காவாகவோ நடிக்கலாம் என்று கூறுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்