ரெஜினா, சிருஷ்டி டாங்கே... உதயநிதிக்கு இரு ஜோடிகள்

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (12:06 IST)
எழில் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் அவருக்கு இரு ஜோடிகள் என்பது உறுதியாகியிருக்கிறது. ரெஜினா, சிருஷ்டி டாங்கே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.


 
 
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவுடன் நடிப்பதாக இருந்த உதயநிதி திடீரென்று அந்தப் படத்திலிருந்து விலகி, எழிலுக்கு கால்ஷீட் தந்தார். எழிலின் கடைசிப் படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஹிட்டானதால் இந்த முடிவை உதயநிதி எடுத்ததாக கூறப்படுகிறது.
 
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகிகளாக ரெஜினா, சிருஷ்டி டாங்கே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இசை டி.இமான், காமெடிக்கு சூரி.
 
இந்த மாதம் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்