பீஸ்ட் இரண்டாம் நாள்…. திரையரங்குகளின் நிலை என்ன?

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (09:51 IST)
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

நேற்று வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு திரையரங்குகளில் குவிந்தனர். திரை அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் கொண்டாட்டங்கள் நடந்து சிறப்புக் காட்சிகள் தொடங்கின. ஆனால் உள்ளே சென்ற ரசிகர்கள் அதே சந்தோஷத்தோடு திரும்பவில்லை.

படத்தின் மோசமான திரைக்கதை காரணமாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். நேற்றே சமூகவலைதளங்களில் மீம்களும் ட்ரோல்களும் உருவாகி பரவின. இந்நிலையில் இன்று கேஜிஎப் 2 ரிலீஸாகி மிகப்பெரிய பாராட்டுகளை ரசிகர்களிடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று பீஸ்ட் இரண்டாம் நாளில் நகர்ப்புற பகுதிகளை தவிர மற்ற புறநகர் பகுதிகளில் பெரிய வரவேற்பு இல்லை என சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளே திரையரங்குகள் காலியாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்