முதலில் திமுக… இப்போது காங்கிரஸ் – குஷ்பு கழட்டிவிட்டது ஏன்?

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:49 IST)
நடிகை குஷ்பு பாஜகவில் சேர்ந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கான பின்னணி காரணங்கள் என்ன என்பது குறித்து பல்வேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன.

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவருமான குஷ்பூ பாஜகவில் சேர இருப்பதாக கடந்த இரண்டு மாதங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் நேற்று அதை உறுதிப் படுத்தும் விதமாக பாஜகவில் சேர்ந்தார். போன வாரம் வரை பாஜகவை விமர்சித்து வந்த குஷ்பு இப்போது அந்த கட்சியில் சேர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதற்கான பின்னணி என்பது குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை சொல்லி வருகின்றனர்.

நடிகை குஷ்பு ஆரம்பத்தில் திமுகவில் இருந்த போதும் சரி, அதன் பின்னர் காங்கிரஸுக்கு சென்ற போதும் சரி அவர் தனது பிரபலத்துக்கு ஏற்ற மாதிரியான பதவியை எதிர்பார்த்துள்ளார். ஆனால் இரண்டு கட்சிகளிலுமே பொறுப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பாஜகவிலோ இன்று சேர்ந்தால் நாளை பதவி என்ற சூழல் உள்ளதால் இப்போது அந்த கட்சிக்கு தாவியுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்