இந்நிலையில் திடீரென விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜகவில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் வெளியானது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் “நான் பாஜகவில் இணைவது குறித்து யோசித்ததே இல்லை. நான் பாஜகவில் இணைய போவதாக எதற்காக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகிறார்கள் என்றும் தெரியவில்லை” என குழப்பத்துடன் கூறியுள்ளார்.