யாரும் கோச்சிக்காதிங்க… ராஷ்மிகாவின் மனம் நெகிழ்ந்த நன்றி!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (11:32 IST)
நடிகை  ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி ராஷ்மிகா மந்தனா தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துகளைக் கூறினார். அன்றுதான் அவர் தளபதி 66 படத்தின் கதாநாயகி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளுக்கு வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் ‘ அன்பானவர்களே… நான் கொஞ்சம் தாமதமாகதான் சொல்கிறேன் என்று எனக்கு தெரியும். எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு எல்லோரின் வாழ்த்துகளுக்கும் பதிலனுப்பினேன். யாருக்காவது நான் பதில் சொல்லவில்லை என்றால் கோபப்பட வேண்டாம். நீங்கள் அனைவரும் என்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றினீர்கள். உங்கள் வாழ்த்துகளால் நான் காதுவரைக்கும் சிரித்து மகிழ்ச்சி அடைந்தேன். அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவர் மீதும் நான் அன்பு வைத்திருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் அணைப்பை அனுப்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்