பாலிவுட்டின் பேமஸ் இயக்குநர் கபீர் கான் இதனை இயக்குகிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் உருவாகவுள்ளது. இதற்காக 1983 உலகக்கோப்பையில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களிடம் சென்று அவர்களின் அனுபவத்தை கேட்டறிந்து வருகின்றனர் படக்குழு. மேலும் இங்கிலாந்து சென்று அங்குள்ள உலகக்கோப்பை பைனல் நடைபெற்ற லார்ட்ஸ் மைதானத்துக்கும் விசிட் அடித்துள்ளனர். அதேபோல் கபில்தேவுக்கு நெருக்கமான கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து படக்குழுவினர் பேசி வருகிறார்கள்.
இந்தப் படம் குறித்து புதிய அப்டேட் இப்போது வெளியாகியிருக்கிறது. படம் உருவாக்கத்தில் கபில்தேவ் ஏற்கனவே உதவி வரும் நிலையில், அவரது 23 வயது மகள் அமியா, படத்தில் உதவி இயக்குநராக இணைந்திருக்கிறார். கபில்தேவுடன் விளையாடிய சந்தீப் படேல் கதாபாத்திரத்தில் அவரது மகன் சிராக் படேல் நடிக்கும் நிலையில், மேலும் ஒரு வாரிசு இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது. 1983 படம் 2020ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.