கபீர்கான் இயக்கி வரும் இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிக்க நடிகர் ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க விஜய் தேவரகொண்டாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது