பிரபல பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங்!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (08:48 IST)
பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் பேப்பர் என்ற இதழுக்காக நிர்வாணமான போஸ்களைக் கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ரண்வீர் சிங். சக பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனை சமீபத்தில் இவர் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் வெளியான 83 படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் வேடத்தை ஏற்று நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது இவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த போஸுக்காக கவனத்தைப் பெற்றுள்ளார். பேப்பர் என்ற அந்த ஊடகத்துக்காக ரண்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்