‘கோஹ்லி கேப்டன்சியில் நான் ஆடியிருந்தால்…’ முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கருத்து!

வியாழன், 21 ஜூலை 2022 (15:41 IST)
இந்திய அணியில் ஆக்ரோஷமாக செயல்படும் வீரர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீசாந்த்.

இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய இரு தொடர்களிலும் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார். அதன் பின் சட்ட ரீதியாக பல போராட்டங்களை நடத்தி 7 ஆண்டுகாலமாக அதை குறைத்தார்.

சமீபத்தில் அவரது தண்டனைக் காலம் செப்டம்பர் மாதத்தோடு முடியும் நிலையில் உடல்தகுதியை நிரூபித்தால் அவர் கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் அவர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது ஸ்ரீசாந்த் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “கோஹ்லி தலைமையில் நான் விளையாடவில்லை. அப்படி நடந்திருந்தால் இந்தியா 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்றிருக்கும்’ எனக் கூறியுள்ளார். ஸ்ரீசாந்தின் இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்களை எழுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்