என்னப்பா குழப்புறீங்க… ரஜினிகாந்தின் கூலி படத்தில் மீண்டும் இணையும் பாலிவுட் நடிகர்?

vinoth
செவ்வாய், 9 ஜூலை 2024 (14:48 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், பஹத் பாசில், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்கள் சிலரும் படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் பஹத் பாசிலும் ஒருவராக இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இப்போது வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முன்னர் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்ட ரண்வீர் சிங் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் அவரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் அவர்தான் முக்கிய வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்