ஹீரோயின் ரேஞ்சுக்கு சம்பளம் கேட்கும் ராஜமாதா!!

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (18:03 IST)
நடிகை ரம்யா கிருஷ்ணன் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். அதுவும் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் அவர் புகழின் உச்சியையே கண்டிருப்பார்.


 
 
வழக்கமாக குணசித்ர நடிகைகளுக்கு சம்பளம் ஹீரோயின்களைவிட குறைவாகவே தரப்படுகிறது. பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தை ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த பின்னர், அவருக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. 
 
இதனால் ரம்யா கிருஷ்ணன் தடாலடியாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். ஒரு கோடிக்கும் சற்று குறைவாக சம்பளம் பெற்று வந்த நிலையில், தற்போது பெரிய பட்ஜெட் படங்களுக்கு 3 கோடியும், மீடியம் பட்ஜெட் படங்களுக்கு 2.5 கோடியும் சம்பளம் கேட்கிறாராம் ரம்யா கிருஷ்ணன்.
 
அடுத்த கட்டுரையில்